முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் அடுத்த மாதம் 10-ம் தேதி முடிவடைகிறது. முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விவாதங்களால் அனல் பறக்கும்
இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் இட ஒதுக்கீடு விவகாரம், டெல்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே நிலவி வருகிற மோதல் போக்கு, காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் கட்சி என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விவாதிக்க அரசு தயார்
கூட்டத்தில் கலந்து கொள்ள பாராளுமன்றம்  வந்த பிரதமர்  மோடி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரும் என நம்புகிறோம். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எந்தவொரு கட்சிக்கும் எந்தவொரு பிரச்சினை இருந்தாலும்,  பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் . எல்லா அனுபவமுள்ள உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளையும், கலந்துரையாடல்களையும் எதிர்பார்க்கிறோம். நாட்டின் நலனுக்காக இந்த மழைக்கால் கூட்டத்தில் பல்வேறு மசோத்தாக்கல் நிறைவேற்றப்படும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து