முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தை தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்புக்கு ஆப்கான் தலிபான்கள் நிபந்தனை

புதன்கிழமை, 18 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

காபூல், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டில்...

கடந்த 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் களின் ஆட்சியை அகற்றியது. கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் அரசு படையுடன் தலிபான்கள் உள் நாட்டுப் போரில் ஈடுபட்டு வரு கின்றனர். ஆப்கானிஸ்தானில் 40 சதவீத பகுதி இன்னமும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

15,000 வீரர்கள்...

தற்போது 15,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக போரில் ஈடுபடாமல் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி அரசியல் ரீதியாக முயற்சி செய்து வருகிறார். தலிபான்களை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க தயார் என்று அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகிறது.

பேச்சுவார்த்தை...

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக வட்டா ரங்கள் கூறியபோது, “தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். எனினும் ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் கள் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

நீக்க வேண்டும்...

இதுதொடர்பாக தலிபான்கள் தரப்பில் கூறியபோது, “அமெரிக்கா வின் கருப்பு பட்டியலில் இருந்து தலிபான்களின் பெயரை நீக்க வேண்டும். கத்தாரில் அரசியல் அலுவலகம் தொடங்க அனுமதி வழங்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்காவின் அதிகாரபூர்வ பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து