முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அர்னால்ட்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ரஷ்ய அதிபர் புதின் முன்  நனைந்த நூடுல்ஸ் போல நின்றீர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை அர்னாட்ல்ட் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

90 நிமிடங்கள்...

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அதன்பின் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து ட்ரம்பும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் புதினும் ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

தலையிட்டது இல்லை...

அதில் புதின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபட கூறுகிறேன். என்னை டிரம்ப் நம்புகிறார். அவரை நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

இணைந்து செயல்படும்...

அதில் டிரம்ப் பேசும்போது, ”அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பிரச்சினைகள் உலகறிந்தது. இருநாட்டு உறவில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.   இனி வரும் காலங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம்” என்றார்.

நனைந்த நூடுல்ஸ்...

இந்நிலையில், நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஆளுநரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்,  "அதிபர் டிரம்ப், நான் இப்போது ரஷ்ய அதிபர் உடனான உங்களது பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அந்த வீடியோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நீங்கள் புதின் முன்  நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்கள். ஒரு சிறிய ரசிகனைபோல நடந்துக் கொண்டீர்கள்.

நீங்கள் புதினிடம் செல்ஃபியோ அல்லது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க போகிறீர்களா. புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் நமது உளவுத்துறை மற்றும் நீதிதுறையை விற்றுவீட்டீர்கள்.  நீங்கள் அமெரிக்காவின் அதிபர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து