முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் கைத்தறி ஆதரவுத்திட்டம் - கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் .ஓ.எஸ்.மணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதன்கிழமை, 18 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

 மதுரை- மதுரை மாவட்டம், மடீட்சியா அரங்கத்தில் இன்று(18.07.2018) தமிழக அரசின் கைத்தறி ஆதரவுத்திட்டம் - கலந்துரையாடல் கூட்டத்தில்   கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  .ஓ.எஸ்.மணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தெரிவிக்கையில்:
 தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கைத்தறி ஆதரவுத் திட்டம் குறித்து கைத்தறி நெசவாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கருத்துக்களை கேட்பதற்காக ஏற்கனவே காஞ்சிபுரம் மற்றும் ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று தென் மாவட்டங்களை மையமாக கொண்ட மதுரையில்   மூன்றாம் கட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொண்மையான பழமை மாறாமல் பல்வேறு நல் ஆதரவை பெற்று உலக மக்களை கவரக்கூடிய ஒரு கௌரமான தொழில் கைத்தறி தொழிலாகும். தள்ளுபடி மானியம் கடந்தாண்டு 80 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தப்பட்டு தற்போது 150 கோடியாக உயர்த்தி உள்ளார்   முதலமைச்சர்  .
   முதலமைச்சர்  2018-19ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்தபோது கைத்தறி ஆதரவு திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இத்திட்டத்திற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.24,000 ஆக இருந்த பருத்தி இன்று ரூ.51,000 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று 135த்திற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைத்துள்ளது. கைத்தறி பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசு இந்த 5 சதவீத வரியை குறைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அரசின் கைத்தறித்துறை இன்னும் ஒரு சில கஷ்டத்தை சந்திகின்றது. அது என்னவென்றால் தரமான பட்டு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உண்மை தன்மை மக்களுக்கு புரியாமல் உள்ளது. மக்கள் கலப்பட பொருட்களை விரும்புகின்றனர். ஸ்மார்ட் கார்டு வந்த பிறகு இலவச வேஷ்டி சேலைகள் கொடுப்பது குறைந்துள்ளது. ஸ்மார்ட் கார்டு திட்டம் வருவதற்கு முன்பாக 1 கோடியே 81 லட்சம் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 54 லட்சம் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.   அம்மா அவர்கள் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தார்கள்.   அம்மா அவர்கள் 175 கோடி ரூபாய் செலவில் நூற்பாலைகளை நவீனபடுத்தினார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 61 சதவீத நூற்பாலைகள் உள்ளன. ஆனால் பருத்தி உற்பத்தி 5 சதவீதம் மட்டுமே உள்ளது. எனவேதான்   முதலமைச்சர் அவர்கள்,   நிதி அமைச்சர்,   வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு பருத்தி உற்பத்தியை உயர்த்த ஆலோசனை வழங்கினார்.
..
தமிழ்நாடு அரசு 49 சதவீதம் நிதியுதவி வழங்கி கழிவுநீர்; சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 7.5 சதவீதமாக இருந்த ஏற்றுமதி மானியத்தை மத்திய அரசு 2.5 சதவீதமாக குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஏற்றுமதி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 இக்கருத்தரங்கில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர்  கே.பணீந்திரரெட்டி,   தலைமை உரை வழங்கினார். 
 இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட பயிற்சி ஆட்சியர்  .கே.எம்.பிரவின்குமார், , கைத்தறி நெசவாளர் பிரதிநிதிகள், கைத்தறி நெசவாளர்கள், தனியார் ஜவுளி நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து