முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா அனுமதி வழங்கியுள்ளார்.

காங். கொண்டு வந்த தீர்மானம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதும் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி ஏற்று கொண்டனர். பின்பு பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.அவர் பேசும் போது  இந்த ஆட்சியில் விவசாயிகள் தினமும் தற்கொலைச் செய்கிறார்கள். பெண்கள் தினமும் கற்பழிக்கப்படுகிறார்கள் நாங்கள் உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வருவோம் என கூறினார்.

நாளை விவாதம்

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை . இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது நாளை மக்களவையில் விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி வழங்கினார்.

மிகுந்த நம்பிக்கை...

இதையடுத்து பேசிய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் மக்களுக்கு இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சபையில் அமளி

முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி-நேரம் முடிந்து விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறியுள்ளார். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர் இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில்  பல்வேறு  பிரச்சினைகள் குறித்து போரட்டம் நடத்தினர். தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியால் ராஜ்யசபா மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி  பாராளுமன்றத்தில்  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாடம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து