முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு கார் பரிசளித்து நெகிழச் செய்த முதலாளி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

அலபாமா: 32 கி.மீ. நடந்து சென்று பணியில் சேர்ந்த ஊழியரைப் பார்த்த முதலாளி அவருக்கு காரைப் பரிசாக அளித்து நெகிழச் செய்தார்.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாம் நகர் அருகே பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர்கார். கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதி நேர வேலை கிடைத்தது. இந்த நிறுவனத்துக்குச் செல்ல 32 கி.மீ. தொலைவை வால்டர் கடக்க வேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய காத்தரீனா புயலில் வால்டரின் வீடு தரைமட்டமானதால், புதிய வீட்டில் தனது தாயுடன் வறுமையான சூழலில் வாழ்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் வேலை கிடைத்து முதல்நாள் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், கையில் பணம் இல்லாத காரணத்தால், பெல்ஹாம் நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பிரிமிங்ஹாம் நகருக்கு வால்டர் நடக்கத் தொடங்கினார்.

அப்போது, அதிகாலை நேரத்தில்  ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் அதிகாரி வால்டரிடம் விசாரணை நடத்திய போது தன்னுடைய குடும்ப சூழலைக் கூறி கையில் பணம் இல்லாததால் வேலைக்கு நடந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட போலீஸார், வால்டருக்கு உணவு வாங்கிக் கொடுத்து விடிந்த பின் செல்லலாம் எனக் கூறி ஒரு தேவாலயத்தில் தங்க வைத்துள்ளனர். அதன்பின் காலையில் அந்த போலீஸ் அதிகாரிகள் வால்டரை அழைத்துக் கொண்டு தங்களின் தோழி லேமே என்பவர் வீட்டுக்குச் சென்று அவரது கார் மூலம் வால்டரை அழைத்துக் கொண்டு நிறுவனத்தில் இறக்கி விட்டனர். மேலும், அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் இந்தக் கதையைக் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் லேமே பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்லின் தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து அவரை நெகிழ்ச்சி அடையச் செய்தார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும், லேமே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருவதுடன் வால்டரைப் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து