முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தத்தின் காரணமாக அந்த சட்டம் பலனற்றதாகி விடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின் படி தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகள் ஆகியவை தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர்களின் சம்பளத்திற்கு இணையாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்பொழுது மத்திய அரசானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள், அதே போல் மாநில தலைமைத் தகவல் ஆணையர் ஆகியோர்களுக்கான பதவிக்காலத்தினை மத்திய அரசு தீர்மானம் செய்யும் படி இந்தத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் வழியாக அவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றையும் மத்திய அரசு தீர்மானம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தத்தின் காரணமாக அந்த சட்டம் பலனற்றதாகி விடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள உரிமையுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியானது பொதுமக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என்றும் அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்றும் விரும்புகிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தத்தின் காரணமாக அந்த சட்டம் பலனற்றதாகி விடும். இதனை ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து