முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொய்டா கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

நொய்டா : நொய்டாவில் நிகழ்ந்த கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் நொய்டாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 6 மாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை இடிந்தது. இந்த கட்டடம் அருகில் இருந்த 4 மாடி கட்டடம் மீது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த விபத்தில் புதன்கிழமை இரவு நிலவரப்படி 8 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை தீயணைப்புத் துறையினர் மேலும் ஒரு சடலத்தை மீட்டுள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துவிட்டது.
இந்த விபத்து நேரும் போது கட்டடத்தின் உள் 12 தொழிலாளர்கள் இருந்துள்ளார்கள். அதனால், அந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து 2-ஆவது நாளாக நடைபெறும் மீட்புப் பணியின் போது, இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, கான்கிரீட் ஸ்லாப்புகளை அகற்ற மீட்புப் படையினர் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மீட்புப் பணி இன்று காலை வரை தொடரும் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் போலீஸார் இந்த கட்டட கட்டுமானப் பணியின் கான்டிராக்டரை 5-ஆவது நபராக கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து