முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் வெளியாகிறது புதிய நூறு ரூபாய் நோட்டு - மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : விரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புதிய 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து விரைவில் புதிய 100 ருபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய 100 ரூபாய் நோட்டானது லாவெண்டர் நிறத்தில் காணப்படும். அத்துடன் இந்த் நோட்டின் முன்பகுதியில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்றிருக்கும். அதே போல் பின்புறத்தில் குஜராத்தின் பதான் நகரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான ராணி கா வாவ் படிச் சுவற்றின் படம் இடம்பெற்றுள்ளது . இந்த நோட்டானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. அதேநேரம் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பழைய 100 ருபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து