முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் பலி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலை சூர்யாதருக்கு அருகே அரசு பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின் மருத்துவமனையில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் சம்பவ...

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யாதர் என்ற இடத்தில் 25 பேருடன் சென்ற அரசு பஸ் 250 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நிவாரண நிதி...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து