முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : 27ம் தேதி தேரோட்டம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில்.- 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதும், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதிஎன்றும்,போற்றி புகழ்ந்து அழைக்கப்படுவது   மதுரை மாவட்டம் அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர்கோவில் ஆகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது வருடந்தோறும் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவும்.இந்தவிழா நேற்று காலையில் கோவிலில்  8.35 மணிக்கு தொடங்கியது.இதில் அங்குள்ள  தங்ககொடிமரத்தில் மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரம் வண்ண மாலைகளாலும், நாணல்புல் மாவிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாரதனையும் நடந்தது.அங்குள்ள மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோவில் நிர்வாகஅதிகாரி மாரிமுத்து, மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.பெரியபுள்ளான் மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.கோவில் யானை சுந்தரவள்ளிதாயார் தனது தும்பிக்கையை தூக்கி பிளிரிட்டது. தொடர்ந்து அன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.இன்று 20ம் தேதி காலையில் தங்கப்பல்லக்கு உற்சவமும் இரவு சிம்மவாகன புறப்பாடும் நடைபெறும்.21ந் தேதி காலையில் வழக்கம் போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்திலும்,  22ந் தேதி இரவு தங்ககெருட வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
     23ந்தேதி காலையில் 6.45மணிக்குமேல் 7.30மணிக்குள் மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு அழகர்கோவிலிருந்து சுந்தரராசப்பெருமாள் புறப்பட்டு சென்று திரும்புகிறார்.அன்று இரவு ஷேச வாகனத்திலும், 24ந்தேதி இரவு யானை வாகனத்திலும் 25ந்தேதி இரவு புஷ்பசப்பரத்திலும், 26ந்தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 27ந்தேதி வெள்ளிகிழமை ஆடிபவுர்ணமியன்று நடைபெறுகிறது.
    இதில் அன்று அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்வார்.பின்னர்  காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்    திருத்தேரின் வடம் பிடிக்கப்படும்.அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.28ம் தேதி சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும், 29ம்தேதி உற்சவ சாந்தி நடைபெறும்.தொடர்ந்து அடுத்த ஆகஸ்டு மாதம் 11ம்தேதி ஆடி அமாவாசையும் அன்று இரவு கெருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.இத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் கோவில் நிர்வாகத்தினர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலிசார்களும், செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து