முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்;டிகளை கலெக்;டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
    தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.  ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து பிரசிடென்சி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கோரிக்கை முன் வைத்தார்கள். அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம்  1967ஆம் ஆண்டு அப்போதைய சென்;னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.  வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின்  50வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்மொழியின் சிறப்பினையும், நமது கலாச்சாரத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில்  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 21 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்தார்.     மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியானது 100 மீ ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மூன்று வகையாக ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில்  வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரமும், மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.    மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்பெறுவார்கள். மாநில அளவில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50ஆயிரமும்,  மற்றும் 4 கிராம் தங்கபதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கபதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கபதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் கையால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50வது ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படவுள்ளது.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பா.பிராங்பால் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து