உசிலம்பட்டியில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      மதுரை
usilamppatti news

உசிலம்பட்டி -   தமிழ்  இனம் காத்து நிற்கும் தமிழர் குலச்சாமி அம்மா அவர்களின் அருளாசியோடு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான மாண்புமிகு அம்மா அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாபெரும் சைக்கிள் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 1000 தொண்டர்களுடன் கழக அம்மா பேரவை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஆர்.பி.உதயகுமார்; சைக்கிளில் வந்தார்.
     முன்னதாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பா.நீதிபதி சேடபட்டியில் அதிமுக தொண்டர்களுடனும,; பொதுமக்களுடனும் சேர்ந்து அமைச்சருக்கு வரவேற்பு அளித்தார்.
    அமைச்சர் உதயகுமார் பேசும்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஜெயலலிதா பாடுபட்டார். அவரின் கனவு இப்பொழுது நனவாகி உள்ளது. உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. வெகு சீக்கிரம் அதன் திறப்புவிழா நடைபெற்று விரைவில் தண்ணீர் வரும் என உறுதியளித்தார்.
    வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தொழிலாளர்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக உதவித்தொகை, பட்டா மாறுதல், வேளாண் இடுபொருள், இயற்கை மரணம், மற்றும் திருமணம், வாரிசு சான்று, இலவச தையல் இயந்திரம், வண்டல் மண் அனுமதி, நத்தம் வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு சான்று ஆகிய நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
  உயர்திரு.வி.வி.ராஜன் செல்லப்பா மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர், ஆர். பார்த்திபன் எம்.பி., தேனி நாடாளுமன்ற தொகுதி, பா.நீதிபதி எம்.எல்.ஏ. உசிலை ஒன்றிய கழக செயலாளர், ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.,  பெரிய புள்ளான் பி.செல்வம் எம்.எல்.ஏ., கே.மாணிக்கம் எம்.எல்.ஏ.,எஸ்.எஸ். சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள்,  முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, முன்னாள் நகராட்சி சேர்மன் பஞ்சம்மாள் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
  பூமா.கே.ஆர்.ராஜா உசிலை நகர் கழக செயலாளர், ஓ.பிச்சை ராஜன் சேடபட்டி ஒன்றிய கழக செயலாளர், கே.வாசிமலை எழுமலை பேரூர் கழக செயலாளர், ராமநாதன், அன்பு.கே.சி.மா. மணிவண்ணன், ஜெயச்சந்திரன், பி.வேலுசாமி மாவட்ட விவசாய அணி செயலாளர், எம்.போத்திராஜ் மாவட்ட மீனவரணி செயலாளர், கே.பண்பாளன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், பி.மீரா பரமன் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், வி.பி.ராஜா மா.இளைஞரணி செயலாளர், முன்னாள் சேர்மன்கள் டி.ஆர். பால்பாண்டி, பவளக்கொடி ராசுக்காளை, முனியம்மாள் பிச்சைமணி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தினர்.
    உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மதுரை புறநகர் மாவட்டம் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக, நகர் கழக, பேரூர் கழக சார்பு அணி செயலாளார்கள் மற்றும், வார்டு செயலாளர்கள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து