முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் தலையீடு: புடின் பொறுப்பேற்க டிரம்ப் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிட்டனர். இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது டிரம்ப் வெற்றி பெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்தது உண்மைதான். இதை பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளேன். அமெரிக்காவின் அதிபர் என்ற வகையில் அனைத்து விவகாரங்களுக்கும் நானே பொறுப்பேற்கிறேன். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் புடினே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த சந்திப்புக்குப் பின் டிரம்ப் மற்றும் புடின் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று இருவரிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டை அதிபர் புடின் திட்டவட்டமாக மறுத்தார். அதிபர் டிரம்ப் கூறியபோது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து