முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

128 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்த ஆசியாவின் மிக சிறிய அதிசய குழந்தை செர்ரி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஐதராபாத்: ஆசியாவின் மிகச் சிறிய அதிசயக் குழந்தை என்று அழைக்கப்படும் செர்ரி என்ற பெண் குழந்தை, பிறந்து சுமார் 128 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி ஐதராபாத்தின் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வெறும் 25 வாரக் கருவாக இருந்த நிலையில், செர்ரியின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தைப்பேறு ஏற்பட்டது. குழந்தை பிறந்த போது உடல் எடை வெறும் 375 கிராம் மட்டுமே இருந்தது.

இவ்வளவு எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது அதிசயம் என்பதால், இந்த குழந்தை அதிசயக் குழந்தை என்றும், தெற்காசியாவின் மிகச் சிறிய குழந்தை என்றும் அழைக்கப்பட்டாள்.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரவ் - நிதிகா தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 முறை கருக்கலைப்பு நேரிட்டு 5-வது முறையாக குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவமனையில் செர்ரி என்று பெயரிட்டார்கள். குழந்தை பிறந்த போது, மஞ்சள் காமாளை, பால் குடிப்பதில் சிக்கல், நுரையீரல் போதிய வளர்ச்சி அடையாதது போன்ற பல பிரச்சினைகள் செர்ரிக்கு இருந்தது.

செர்ரியின் உடல்நலனை மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்தது. வென்டிலேட்டரில் சுமார் 105 நாட்கள் செர்ரி வைக்கப்பட்டிருந்தாள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு நன்கு உடல் எடை தேறி தற்போது அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரது உடல் எடை 1.980 கிலோ கிராம். குழந்தை பிறந்த போது வெறும் 375 கிராமும், 20 செ.மீ. மட்டுமே இருந்தது. ஒருவரின் உள்ளங்கை அளவுக்குத்தான் செர்ரி இருந்தாள். பொதுவாக குழந்தைகள் 2.7 கிலோ முதல் 3.5 கிலோ வரை எடையுடன் இருப்பது வழக்கம் என்கிறார்கள் செர்ரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து