முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: மக்களவையில் நடந்த மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு படம் பற்றி பேசப்பட்டது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பியான கல்லா ஜெயதேவ் பேசினார்.

இவர் மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மருமகன். கிருஷ்ணாவின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மகேஷ் பாபுவின் மைத்துனர். தற்போதைய நாடாளுமன்றத்தின் பணக்கார எம்.பிக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தனது சொத்து மதிப்பு ரூ. 683 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் தனது பேச்சின் துவக்கத்தில், தெலங்கானா மாநில உருவாக்கத்தின் பொழுது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதி கூறி, அதனை நிறைவேற்றாத பிரதமர் மோடி மீது குறை கூறினார். அதற்கு அவர் சமீபத்தில் வெளியான தனது மைத்துனர் மகேஷ்பாபுவின் பரத் அன்னே நேனு படத்திற்கு பற்றிக் குறிப்பிட்டார்.

இந்தப் படத்தில் மாநில முதல்வராக இருக்கும் தனது தந்தை திடீரென்று மரணமடைந்து விட வெளிநாட்டில் இருந்து திரும்பும் இளம் தொழிலதிபரான மகேஷ்பாபு, அரசியலில் நுழைந்து முதல்வராகிறார். தனது செயல்களால் மக்கள் விரும்பும் முதல்வராகிறார். சத்தியத்தை காக்க இயலாதவன் மனிதனே இல்லை என்ற தனது தாயாரின் சொல்படியே செயல்படுகிறார் மகேஷ் பாபு என்பதே படத்தின் கதை.

இதைக் குறிப்பிட்ட ஜெயதேவ், இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது ஏன் என்றால் அது பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது இந்த பேச்சு மைத்துனர் படத்திற்கான விளம்பரம் என்றும், சிலர் இந்தியாவில் அரசியலும், சினிமாவும் பிண்ணிப் பிணைந்திருப்பதை இது காட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து