முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசின் ஜீரோ செய்தித்தொடர்பாளர் ஸ்டாலின் தமிழிசை கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தித் தொடர்பாளர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் விளாசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

லோக்சபாவில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத தி.மு.க. எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க. எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது? தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதற்கு நன்றி. நல்ல திட்டங்களை ரஜினி ஆதரித்தால் பா.ஜ.க. ஆதரவாளர் என முத்திரை குத்துவதா? ரஜினியை பா.ஜ.க.வின் நட்சத்திர செய்தித்தொடர்பாளர் என்கிறார் ஸ்டாலின். காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர்தான் ஸ்டாலின். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து