முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை காலை விநாடிக்கு 1,07,064 கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 1,04,436 கனஅடியாக குறைந்தது. அன்றைய தினம் இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டி.எம்.சி.-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாசனத்துக்காக நேற்று முன்தினம் காலை முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும், நீர் இருப்பு 81.33 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1,01,277 கனஅடியிலிருந்து 59954 கன அடியாக குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து