முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று காரசார விவாதம் நடந்தது. அதை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தெலுங்குதேசம் கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போய் விட்டது.

பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதமும், ஓட்டெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தை சுமார் 7 மணி நேரம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டமிட்டிருந்தார். ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு நிமிடங்கள் பேச வேண்டும் என்பது குறித்து நேரம் ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்படி காங்கிரசுக்கு 38 நிமிடங்களும், அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

முதலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்து தெலுங்குதேசம் எம்.பி. சீனிவாஸ் பேசினார். விவாதத்தில் ராகுல் ஆற்றிய உரையில், ரபேல் போர் விமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து குற்றம் சாட்டினார். அதை பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை ராகுல் இந்தியில் விமர்சித்த போது, பா.ஜ.க.வினரிடம் சிரிப்பலை எழுந்தது. உடனே தன்னை சுதாரித்துக் கொண்ட ராகுல், பாஹர் ஜாத்தே ஹன் மீனிங் அப்ராட், ஒபாமாஜி டு டிரம்ப்ஜி…(வெளியில் போவது என்பதன் அர்த்தம் வெளிநாடுகள்..  ஒபாமாஜியிடம்…டிரம்ஜியிடம்…)’ என திருத்தமாகத் தெரிவித்தார். இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்திருந்தது. எனினும், ராகுலின் விளக்கம் பா.ஜ.க.வினர் இடையே மேலும் சிரிப்பலையைக் கூட்டியது. பிரதமர் மோடியும் அடக்க முடியாமல் சிரித்தார். இதை பொருட்படுத்தாமல் தன் பேச்சை ராகுல் தொடர்ந்தார்.

அதை தொடர்ந்து  தனது உரையை முடித்த ராகுல் இருக்கையில் இருந்து நேராக மோடி அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று அவரை கட்டித் தழுவி, கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார். இரு தலைவர்களும் அப்போது ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுலின் உரைக்கு தக்க பதிலடி கொடுத்து உரையாற்றினார். பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சின்கா பேசுகையில், காங்கிரசார் ஏற்றுக் கொண்ட வாரிசு அரசியலை பா.ஜ.க. ஏற்காது. மோடி அரசு ஏழை மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பா.ஜ.க. பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது. அதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து