ராமேஸ்வரம் அருகே மீனவர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட வெடி குண்டுகள் 25 நாட்களுக்கு பின் இடம் மாற்றம்:

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      ராமநாதபுரம்
rms news

  ராமேஸ்வரம்;  ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்களை சிவகங்கை வெடிபொருள் மையத்திற்கு நேற்று இடம் மாற்றம் செய்யப்பட்டது. 
  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப்பகுதியில்  மீனவர் எடிசன் என்பவரின் வீடு உள்ளது.இவர் வீட்டில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அப்போது அந்த குழியில் வெடிபொருள் குண்டுகள் குவியல் குவியலாக கண்டு பிடிக்கப்பட்டது.இது குறித்து தகவல்கள் அறிந்த தங்கச்சிமடம் போலீஸார்கள் அப்பகுதிக்கு வந்தனர்.பின்னர் அந்த குழியிலிருந்து  400 அதிநவீன இயந்திர துப்பாக்கி குண்டுகளையும், 5500 இலகுரக துப்பாக்கிகுண்டுகளையும்,  4928 எஸ்.எல்,ஆர் ரவுன்ஸ் குண்டுகளையும், 199 டெனைடர் சிலாப் துப்பாக்கி குண்டுகளையும், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்களையும், 20 கன்னி வெடிகளையும், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகளையும், 15 கையேறி குண்டுகளையும், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுகளையும், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20 என அதிக குதிரை திறன் கொண்ட துப்பாக்கி குண்டுகளை எடுத்தனர்.அதன் பின்னர்  இந்த குண்டுகளை கைப்பற்றிய போலீஸார்கள் வெடிகுண்டு பரிசோதணை போலீஸார்கலை வரவழைத்து சோதணை நடத்தினர்.பின்னர் பாதி குண்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதான கிடங்கிற்கு கொண்டு சென்றனர். அது போக குழியிலிருந்த 199 டெக்னேட்டர் சிலாப் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்கள், 20 கன்னி வெடிகள், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகள், 15 கையேறி குண்டுகள், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுள், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20  குண்டுகள் ஆகிய பொருள்களை மீனவர் எடிசன் வீட்டில் குழிதோண்டி அதற்குள் மண் மூட்டைகளை வைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில் குழியில் வைத்துள்ள  குண்டுகளின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்வதற்காக  சென்னையிலுள்ள  வெடிமருந்து கட்டுபாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் இரண்டு முறை வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.பின்னர்  சில வெடிமருந்துகளை தனித்தனியாக ஆய்வுக்காக பாக்ஸில் ஆசிட் தண்ணீரில் எடுத்து சென்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மீனவ குடும்பங்களின் நலன் கருதி  வெடிகுண்டுகளை இடம் மாற்றம் செய்ய தங்கச்சிமடம் போலீஸார்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.அதன் பேரில் 25 நாட்களுக்கு பிறகு குழியில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு பொருள்களை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதிமன்ற நீதிபதி பொருப்பு பாலமுருகன், சென்னையிலுள்ள வெடிமருந்து பாதுகாப்பு மையத்தின் அதிகாரி சேக்உஷேன்,ராமேசுவரம் டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர்கள் பார்வையிடுவதற்காக மீனவர் எடிசன் வீட்டிற்கு நேற்று மாலையில் வருகை தந்தனர்.அங்கு வெடி பொருள்களை ஆய்வு செய்தனர். அனைத்து வெடிபொருள்களையும் 10 மரப்பலகையால் வடிவமைக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக எடுத்து அதை அட்டைப்பெட்டியில் வைத்து வெடிபொருள்களை பாதுகாப்பு வாகனத்தில் சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியநகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிமவள மையம் கிடங்கிற்கு  தங்கச்சிமடம் காவல்நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஆயுதம் தாங்கி போலீஸார்கள் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து