முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி, அமராவதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் ஆகியவற்றில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

27-ம் தேதி முதல்...
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை முன்னோடிவிவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து உரிய இடைவெளி விட்டு 27-ம் தேதி முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம்1900 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

94,521 ஏக்கர் நிலங்கள்...
இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

120 நாட்களுக்கு...
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து 8 பழைய வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய வாய்க்கால் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்த எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம், அமராவதிஅணை பழைய வாய்க்கால் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து தற்போதைய நீர்இருப்பு மற்றும் எதிர்பார்க்கும் நீர் வரத்தினைக் கருத்திற்கொண்டு முதல்கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முதல் 8 பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக 23-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ம் தேதி முடிய 120 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு மொத்தம் 1944 மி.க.அடி தண்ணீரை திறந்து விட நான்ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகபயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கெலவரப்பள்ளி நீர் தேக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர்திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக பாசனத்திற்கு 25-ம் தேதி முதல் டிசம்பர் 21-ம் தேதி வரை 150 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதான கால்வாய்களிலும் தண்ணீரை திறந்து விட நான்ஆணையிட்டுள்ளேன். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து