முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வருகை தர ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுக்க டிரம்ப் முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்ட்ரஸ் கூறும் போது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் புடினை அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்க டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து இது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த அழைப்பை டிரம்ப் விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு புடினின் வருகை அடுத்த ஆண்டு இருக்கும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து