முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ஒய்.எஸ்.ஆர். காங். பந்த் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக தனது கட்சி தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தார்.

கடந்த முறை இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், இம்முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து  நடைபெற்ற வாக்கெடுப்பில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-
வருகிற 24-ம் தேதி, ஆந்திர மாநிலம் முழுவதும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய பா.ஜ.க. அரசு நமக்கு செய்துள்ள அநீதியை எதிர்க்கும் விதமாக அமையும். மத்தியில் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது மட்டுமே எங்கள் நோக்கம் மற்றும் கோரிக்கை என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து