முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகம் வெற்றி: அமித்ஷா

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித்ஷா கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிகரமாக எதிர் கொண்டது குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா கூறியதாவது:-
குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் அரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்து இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான தனது வன்மத்தை குடும்ப ஆதிக்கம், சாதி ஆதிக்கம், தீண்டாமை மற்றும் அமைதியின்மை உள்ளிட்டவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததன் மூலம், ஜனநாயகத்தை அழிக்கும் பணியை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. அதிலும் பெரும்பான்மையே இல்லாத அக்கட்சி, அரசியலில் இருந்து திவாலாகாமல் இருக்க இதுபோன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து