முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் செயல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகை பிரியா வாரியர்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

கொச்சி: பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரை கட்டித்தழுவினார். பின்னர், தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவர் கண் சிமிட்டினார். பாராளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான நடைமுறையின்போது பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் கட்டித்தழுவியது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கண் சிமிட்டலுக்கு பெயர் போன நடிகை ப்ரியா வாரியர் இது குறித்து கூறுகையில், நான் கல்லூரியில் இருந்து வந்தவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், பாராளுன்றத்தில் கண் சிமிட்டியதை கண்டு ரசித்தேன். அது மிகவும் அழகாக இருந்தது. நான் ஒரு திரைப்படத்தில் அதைச் செய்த பிறகு எனக்கு சொந்தமான அந்த செய்கையை ராகுல் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து