முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார் கைது

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பதேஹாபாத்: அரியானா மாநிலம், பதேஹேபாத் மாவட்டத்தில், போலிச் சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த விவகாரம் வெளியே கசிந்ததால், அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பதேஹாபாத் மாவட்டம், தொஹானா பகுதியில் பாபா பாலக்நாத் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தலைமை அர்ச்சகராகவும், ஆன்மிக குருவாகவும் வலம் வந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லுராம். இவரிடம் ஆசி பெறுவதற்காக வரும் பெண்கள் பிரச்சினைகள் இருக்கிறது, உடல்நலப் பாதிப்பு இருக்கிறது என்று கூறும் போது அவர்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்கிறேன் என்று கூறி அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியும் வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் துணிச்சலாக போலீசிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, தொஹானா போலீசார் பாபா அமர்புரியின் ஆசிரமத்துக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனையிட்டனர். அப்போது, ஆசிரமத்தில் இருந்து ஏராளமான சி.டி.க்கள், பென்டிரைவ், மற்றும் செல்போனும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த செல்போனையும், பென்டிரைவையும் போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 120-க்கும் மேற்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்திருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து வீடியோக்களும் வித்தியாசமானது என்பதால், 120 பெண்கள் வரை பாபா அமர்புரி பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, பாபா ராம்புரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தொஹானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை இது போன்று வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார் பாபா அமர்புரி. அந்தப் பெண் போலீசில் புகார் அளிக்கவே, பாபா அமர்புரி கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து