முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வை வெளியேற்றி நாட்டை பாதுகாப்போம்: மம்தா பேச்சு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: 2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். பா.ஜ.க.வை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலியும், நினைவுக்கூட்டமும் கொல்கத்தாவில் நேற்று  நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆகஸ்ட் 15-ம் தேதி நமது தேசியக் கொடியை அனைத்து தொண்டர்களும் கையில் ஏந்தி, சபதம் எடுத்து, அடுத்த 2019-ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் பா.ஜ.க.வினர் யாரும் தேசியக் கொடியை ஏற்ற விடக்கூடாது என்று சபதம் ஏற்க வேண்டும்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவோம். மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கமில்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து