முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019-ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது இங்கிலாந்து

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐந்து போட்டிகள்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடராகும். இந்த தொடர் ஒருமுறை ஆஸ்திரேலியாவிலும், மறுமுறை இங்கிலாந்திலும் நடத்தப்படும்.

ஆஸி. வெற்றி...

2017-18  ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில்...

அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் அயர்லாந்துக்கு எதிராக முதன்முறையாக இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் நான்கு நாட்கள் கொண்டதாகும். இது லார்ட்ஸில் ஜூலை 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை:-

முதல் டெஸ்ட் - ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை- எட்ஜ்பாஸ்டன்.
2-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை - லார்ட்ஸ்.
3-வது டெஸ்ட் - ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை - ஹெட்லிங்லே.
4-வது டெஸ்ட் - செப்டம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ஓல்டு டிராஃப்போர்டு.
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் - செப்டம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை - ஓவல்.
2019-ல் இருந்து ஐசிசி உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் லீக் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் தொடராக இந்த ஆஷஸ் தொடர அமைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து