முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-ம் நம்பரை ரொனால்டோவிற்கு விட்டுக் கொடுத்த வீரர்கள்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 33 வயதானாலும் அவரது ஆட்டத்தில் சிறிது கூட தொய்வு ஏற்படவில்லை. சமீபத்தில் யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் தொடரில் இவர் இடம்பிடித்திருந்த ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறி ரொனால்டோ தற்போது யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அந்த காலத்தில் இருந்தே 7-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். இது அவருடைய ராசியான நம்பராக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் அவர் ‘CR7’ என்றே குறிப்பிடுகிறார்.

யுவான்டஸ் அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜூயான் குவாட்ராடோ விளையாடி வருகிறார். இவர் 7-ம் நம்பர் ஜெர்சியுடன் விளையாடி வந்தார். யுவான்டஸ் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த உடன், ஜூயான் 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்தார். இந்த அணியில் இத்தாலியைச் சேர்ந்த லெயோனார்டோ ஸ்பினாஸ்சோலா இடம்பிடித்துள்ளார். தற்போது யுவான்டஸ் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் யுவான்டஸ் அணியில் விளையாடும்போது 7 நம்பர் ஜெர்சியுடன் விளையாடினார். தற்போது இவரும் ரொனால்டோவிற்காக 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து