தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      ராமநாதபுரம்
agri news

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
 குறைந்த நீரில் விவசாயிகளின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய  காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தாளித பயிர்கள் மற்றும் மலை தோட்டப்பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40சதவீதம் அல்லது 50சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் எக்டருக்கு ரூ.20ஆயிரம்  மதிப்பில் வழங்கப்படுகிறது.  மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர் நடவு முறைகளில் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு மாவிற்கு ரூ.9,840 மதிப்பீட்டிலும், கொய்யாவிற்கு ரூ.17599 மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.23,100 மதிப்பீட்டிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது.

 மஞ்சள், இஞ்சி, பூண்டு மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12ஆயிரம் வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.  ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. விவசாய பெருமக்கள் தங்களுக்குத் தேவையான விதைகள், நடவு செடிகளின் விவரங்களை உழவன் செயலி மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது.  இதுதவிர, விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படுமு; விபரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை ராமநாதபுரம் 9003631332, மண்டபம் 9443405365, திருப்புல்லாணி 9786751340, போகலூர் 9942673964, நயினார்கோவில் 9842569664, பரமக்குடி 9789541143, கமுதி 9659246637, முதுகுளத்தூர் 9659584931, கடலாடி 9944080594, ஆர்.எஸ்.மங்கலம் 7299462970, திருவாடானை 9442675926 அணுகி  பெற்றுக்கொள்ளவும்.  கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.  தொலைபேசி எண் 04567 230832, 230328
 தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து