பொன் விழா ஆண்டு விளையாட்டு போட்டியில் வெற்;றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்று
சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் மூலம் பொன் விழா ஆண்டையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்;றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தற்பொழுது பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி மாவட்ட அளவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் மூலம் 100 மீட்டர், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 9 வீரர்களுக்கும், 9 வீராங்கணைகளுக்கும் பாராட்டு சான்று மற்றும் முதல் பரிசாக ரூ.2,500ஃ-வீதமும், இரண்டாம் பரிசாக ரூ.1,500ஃ-வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.1,000ஃ-வீதமும் என மொத்தம் 18 நபர்களுக்கு ரூ.30,000ஃ-க்கான காசோலைகளை இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தததுடன் மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, தேவகோட்டை சார் ஆட்சியர் திருமதி.ஆஷா அஜீத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வடிவேல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொறுப்பு) திரு.பிரபு, பயிற்சியாளர்கள் கார்த்திக், ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.