ரக்பி கால்பந்து போட்டியில் தமிழக வீரர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் தமிழ்நாடு ரக்பி கால்பந்து கழக செயலாளர் ராஜ் சத்யன் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      மதுரை
football news

மதுரை- ரக்பி போட்டிகளில் தமிழகம் மிகச் சிறந்த அளவில் உருவாகும். அதற்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் மற்றும் தமிழக ரக்பி கால்பந்து கழகம் தயாராக இருக்கிறது, என்று தமிழ்நாடு ரக்பி கால்பந்து கழக செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ரக்பி கால்பந்து கழகம் மற்றும் ரக்பி இந்தியா இணைந்து   மதுரையில் 2 நாட்கள்  ரக்பி - ஜுனியர் 7 சாம்பியன்ஷிப் என்ற பெயரில் தேசிய அளவில்  போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் 21 மாநிலங்களைச் சேர்ந்த, சுமார் 650க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் அரையிறுதிச் சுற்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. போட்டியினை தொடங்கி வைப்பதற்காக நியூஸிலாந்து நாட்டின் கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பலமுறை விளையாடிவருமான ஸ்காட் ஸ்டைரஸ் மதுரை வந்திருந்தார். அவருக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரக்பி கால்பந்து போட்டியில் அதிக ஆர்வம் உடைய கிரிக்கெட் வீரர் ஸ்காட், ரக்பி வீரர்களிடம் கலந்துரையாடினார். அதோடு போட்டியினை தொடங்கி வைத்து, சிறிது நேரம் விளையாடினார். இது போட்டிகளில் பங்கேற்க வந்திருந்த வீரர், வீராங்கனைகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் உற்சாகமாக கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து வீரர்களிடையே பேசிய கிரிக்கெட் வீரர் ஸ்காட், இந்திய நாட்டில் முக்கியமாக தமிழகத்தில் கபடி, ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக ரக்பியில் தமிழகம் மிக சிறந்த அளவில் உருவாக வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ரக்பி கால்பந்து கழகத்தின் செயலாளர் ராஜ் சத்யன், தமிழக வீரர்கள் ரக்பியில் சிறந்து விளங்க அனைத்துவிதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் ரக்பியில் தமிழகம் சிறந்து விளங்குவதற்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் ரக்பி இந்தியா மற்றும் மத்திய, மாநில அரசுகளும், முக்கியமாக தமிழக ரக்பி கால்பந்து கழகம் செய்து தர தயாராக இருக்கிறது, என்றார். முன்னதாக தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வந்து  வீரர், வீராங்களை சந்தித்து வாழ்த்து கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து