முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் அன்பால் வெல்வோம்! மும்பை முழுவதும் ராகுல் சுவரொட்டி

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டியணைக்கும் புகைப்படம் மும்பை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார். இறுதியில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார்.

ராகுலின் செயலை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். பா.ஜ.க.வினரும் ராகுலின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் ராகுலின் செயலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் புகைப்படத்தை மும்பை முழுவதும் காங்கிரசார் ஒட்டியுள்ளனர். அதில், நாங்கள் அன்பால் வெல்வோம், வெறுப்பால் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து