துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு அக். 4-ம் தேதி குரு பகவான் பிரவேசம் - ஆலங்குடி கோவிலில் செப்டம்பரில் லட்சார்ச்சனை விழா

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      ஆன்மிகம்
Guru Bhaghavan 2018 7 23

மதுரை : அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று பிரவேசம் செய்கிறாா். இதனை முன்னிட்டு வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் தொடங்கி 1.10.2018 வரை முதல் கட்டமாக நடைபெறவுள்ளது.

இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் குருபெயா்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வரும் 4.10.2018 அன்று பெயா்ச்சியடைகிறாா். இதனை முன்னிட்டு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா வரும் 27.09.2018 முதல் 01.10.2018 முடிய முதல் கட்டமாகவும் மீண்டும் குருபெயா்ச்சிக்குப் பின் 08.10.2018 முதல் 15.10.2018 வரை 2-வது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து