ராமேசுவரம் திருக்கோவிலுக்கும் புதிய நவகிரகம் விளக்கு.

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      ராமநாதபுரம்
rms temple news

 ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோவிலுக்கு பக்தர்களின் கோரிக்கையேற்று ரூபாய்,25 ஆயிரம் மதிப்பில் புதிய நவகிரகம் விளக்கு ஒன்றை கோவில் நிர்வாகம் நேற்று தயாரித்துள்ளது.
  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது.இதனால் பழமையான கட்டிடம் சேதமடைந்து கிழே விழுந்து சேதமடைந்தது.. இதனையடுத்து ராமேசுவரம் திருக்கோவில் உள்பட தமிழக பகுதிகளிலுள்ள தமிழக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  திருகோவிலில் பாதுக்காப்பு கறுதி பக்தர்கள் தீ பற்ற வைத்து  விளக்கு ஏற்றுவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் தடைவிதித்தது. இதனால் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றமுடியாமல் ஆன்மிக ரீதியாக மனநிலை பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ராமேசுவரம் திருக்கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு ராமநாதசுவாமி சன்னதி முன்பு நந்தி மண்டபத்தில் நான்கு பக்கமும் மூடப்பட்டு பித்தாளையால் செய்யப்பட்ட அணையா விளக்கு ஒன்றை  புதியதாக வைத்துள்ளது.இதில்  திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணையை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர். இதனையடுத்து திருக்கோவிலில்  அமைந்துள்ள நவகிரகம் சுவாமி சன்னதியில் சுவாமிகளை  9 முறை சுற்றி விளக்கேற்றி வழிபட்டு சென்றால் பக்தர்களும் தனது குடும்பத்திற்கு தீமைகள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பதை ஐய்தீகமாக கடைபிடித்து வருகின்றனர்.  இந்த சன்னதியிலும் பக்தர்கள் விளக்கேற்றுவதை கோவில் நிர்வாகம் தடைவித்தது.இதனால் பக்தர்கள் நவகிரகம் சுவாமி சன்னதியில் விளக்கேற்றி வழிபடமுடியாமல் முடியாமல் சென்று வந்தனர்.இதனையொட்டி கோவில் நிர்வாகம் பக்தர்களின்  வசதிகேற்ப நவகிரகம் விளக்கு ஒன்றை நேற்று புதியதாக தாயாரித்து உள்ளது.இந்த விளக்கை முசிரி பகுதியிலிருந்த குணசேகரன்,சிவக்குமார் ஈகிய இரண்டு ஊழியர்களை வரவழைத்து 2 அடி நிளத்திலும்,1.5 அகளத்தில் ஸ்டாண்ட் அமைத்து அதற்கு மேல் தாமரை வடிவமைப்பில் 9 கிண்ணங்கள் பொறுத்தி  பித்தாளை தகடில் நவகிரகம் விளக்கு ஒன்றை புதியதாக தயாரித்து உள்ளது.இந்த விளக்கை சில நாட்களில் பக்தர்களின் பயன் பாட்டிற்கு நவகிரகம் சுவாமி சன்னதி முன்பு வைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து