முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதநகர்,- விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிப்பிரிவின் மூலம் விருதுநகர் லட்சுமி நகரைச் சார்ந்த  .மு.பேச்சியம்மாள் என்பவர் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டமைக்காக மாநில நோயாளர் நல நிதியிலிருந்து ரூ.25,000 - க்கான காசோலையையும், முன்னாள் படைவீரர் நலன் சார்பில், 25.10.2000 அன்று ஆப்ரேஷன் ரக்ஷாக்  போருக்கு நிகரான நடவடிக்கையில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர் சுபேதார் P.அய்யாவு அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின் பெறப்படும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து ரூ.30,000 - க்கான கருணைத் தொகையினையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  வழங்கினார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நேர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்   12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14,160 - மதிப்பில் பார்வையற்றோருக்கான  விலையில்லா ப்ரெய்லி கைக்கடிகாரங்கள் மற்றும் கருப்புக்கண்ணாடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், வழங்கினார்கள்.
  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயகுமார்;, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) .உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  .கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்  .சிவசங்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர்  .என்.வசந்தராஜன், உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து