ராமநாதபுரத்தில் அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்-  ராமநாதபுரம் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்வளர்;ச்சித்துறையின் சார்பாக இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு அலுவலகங்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போதுஅ வர் பேசியதாவது:- மொழி என்பது சமுதாய மக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மொழியினை கருவியாக கையாளுகிறான்.  நமது தமிழ்மொழியானது மிகவும் தொன்மையான இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த மொழியாகும்.  ஒரு மாநிலத்தில் உள்ள அலுவலக நடைமுறைகளை செயல்படுத்த சம்மந்தப்பட்ட மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியே ஆட்சி மொழியாகும்.  அதனடிப்படையில் 1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இச்சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள், அலுவலக ஆணைகள், அரசுக்கடிதங்கள், கோப்புகள், நாட்குறிப்புகள், பெயர்பலகைகள் என அனைத்தும் தமிழிலேயே இருத்தல் வேண்டும்.  அதேவேலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கோ அல்லது பிற மாநில அரசு அலுவலகங்களுக்கோ அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்கலாம். 
  அதன்படி, அனைத்துத் துறை அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்காக தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகின்றன.  அதனடிப்படையில், 2018-ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழி பயிரங்கம் என இரு நாட்கள் நடத்தப்படுகின்றன. இப்பயிலரங்கில்  மொழிபெயர்ப்பும், கலைச் சொல்லாக்கமும்;, ஆட்சிமொழி வரலாறு, சட்டம்;,  ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள்;, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல்;, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும்; ஆகிய தலைப்புகளிலும், மொழிப்பயிற்சி குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும், கருத்துரைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிலரங்கில் கலந்துகொண்டுள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது அலுவலக நடைமுறைகளில் 100 சதவீதம் தமிழ்மொழியில் பின்பற்றி நமது மொழியின் சிறப்பை பேணிக்காத்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.
    இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர்கள் (கோயம்புத்தூர்)முனைவர்.ப.அன்புச்செழியன், (மதுரை) முனைவர்.க.பசும்பொன், ராமநாதபுரம் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மு.சம்சுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து