ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி இந்தியாவிலேயே 2வது சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வரும் துணை முதல்வரும் உருவாக்கியுள்ளனர் வி.வி.ராஜன்செல்லப்பா பெருமிதம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      மதுரை
                        1 copy

மதுரை -      ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர் கிளைக்கழக ஆலோசனைக்கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்
      முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம், கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார்.பாண்டி தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், வண்டியூர் பகுதி கழக செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கள்ளந்திரி சேகர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்
      இக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா சிறப்புரை ஆற்றினார். மற்றும் இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சம்மாள், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், வட்ட கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், உத்தங்குடி வி.டி.மகேஸ்வரன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது
       தமிழகத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை கொண்ட ஒரே இயக்கம் நமது இயக்கமாகும், புரட்சித்தலைவி அம்மா ஆட்சியையும், கட்சியையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் எப்படியாவது கவிழ்த்திட வேண்டும் என்று எதிர்கட்சிகள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இழந்த சின்னத்தையும், கொடியையும், மீட்டது மட்டுமல்லாது கட்சியைள மிகப்பொலிவுடன், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கியுள்ளனர்
       அது மட்டுமல்லாது ஆட்சியில் அம்மா காட்டிய வழியில் சிறப்பாக வழிநடத்தி இன்று இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகம் நடைபெறுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற வரலாற்று சிறப்பை உருவாக்கியுள்ளனர்.
     விரைவில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு செல்வார்கள் இப்படிப்பட்ட சாதனைகளை மக்களிடத்தில் இங்கு வந்திருக்கும் 196 கிளைக்கழக செயலாளர்கள் மற்றம் 36 ஊராட்சி கழக செயலாளர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும்
     மேலும் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் ஆலோசனைக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அதன் படி நாம் செயல்பட வேண்டும் குறிப்பாக பூத் கமிட்டி அமைக்கப்பட உள்ளது முன்பெல்லாம் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் நாம் அமைத்தோம் தற்போது விரைவாக அமைக்கச்சொல்லியுள்ளார்கள் அதில் பூத் ஏஜெண்ட்களாக இருப்பவர் அரசுக்கு தொடர்புள்ளவராக இருப்பார் ஏனென்றால் வாக்காளர் சரிபார்க்கும் பணியின் போது  அவரின் பணி மகத்தானதாக இருக்கும்
    மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இலக்காக வகுத்து நாம் செயல்பட வேண்டும் குறிப்பாக மதுரையை எடுத்துக்கொண்டால் திட்டங்களை அம்மாவின் அரசு வாரி வாரி வழங்கி வருகிறது மதுரைக்கு குறையில்லாமல் திட்டங்களை வழங்கி வரும் அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறுங்கள் அது மட்டுமல்லாது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையில் வெற்றி கண்டு இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நீர் நிரம்பி வருகிறது வளமான தமிழகத்திற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும் என்று அவர் பேசினார்.
  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து