மகளிர் ஹாக்கி: கொரியாவை வீழ்த்தியது நெதர்லாந்து

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      விளையாட்டு
World Cup Womens Hockey 2018 7 23

உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆட்டம் ஒன்றில் ‘ஏ’பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து- தென் கொரியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ‘டிரா’ செய்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்தை 26-ந்தேதி சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து