மதுரை வண்டியூர் கண்மாயை தூர்வாரி விரைவில் சுற்றுலா மையமாக்கப்படும் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      மதுரை
cellappa news

மதுரை- மதுரை வடக்குதொகுதிக்குட்பட்ட  வண்டியூர் கண்மாய் ரூ.3.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி 2 வாரத்தில் தொடங்கப்படும் என்று வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறினார்.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கிழக்குதொகுதிக்குட்பட்ட ஊமச்சிகுளத்தில் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமையில்நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் பி.அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே.முருகேசன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மற்றும் பஞ்சம்மாள், வண்டியூர் முருகன், மானகிரி மகாதேவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்மாய்களை தூர்வாரி நீர்தேக்கவும், சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 688 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாயை தூர்வாரி நீர்தேக்கி சுற்றுலா மையம் ஏற்படுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரது வழியில் செயல்படும் இந்த அரசு திட்டத்தை செயல்படுத்த கடந்த மானிய கோரிக்கை விவாதத்தின் போது ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்னும் 2 வாரத்தில் வண்டியூர் கண்மாய் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி தொங்கும். இது தவிர வண்டியூர் கண்மாயை சுற்றுலா மையமாக மாற்ற ஏசியன் டெவலப்மெண்ட் வங்கி யிடம் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு கேட்டு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் வண்டியூர் கண்மாயில் நீர்நிரப்பி கரையோரங்களில் பூங்காக்கள் அமைத்து மதுரை மக்களின் பொழுது போக்கு அம்சமாக தீம்பார்க் அமைத்திட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான திட்ட அறிக்கை மதுரை மாநகராட்சியால் தயார் செய்யப்பட்டு வருகிறது. செல்லூர் கண்மாயை பொறுத்தவரை இந்த கண்மாயில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து