துலீப் கிரிக்கெட் போட்டி: இந்திய 'ஏ' மற்றும் 'பி 'அணிக்கு வீரர்களை அறிவித்தது பி.சி.சி.ஐ

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      விளையாட்டு
BCCI 2017 5 7

மும்பை : துலீப் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய ஏ மற்றும் பி அணிக்கான வீரர்களை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதில் இந்திய ஏ கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் பி அணிக்கு மனீஷ் பாண்டேவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யோ யோ-வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சஞ்சு சாம்சன் அணிக்கு திரும்பியுள்ளார்.

சுற்றுப்பயணம்...

தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு, 4 நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதையடுத்து ஆஸ்திரே லிய ஏ அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. மேலும் துலீப் டிராபி போட்டியும் நடக்க இருப்பதால் இதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அணியில் சாஹல்...

தென்னாப்பிரிக்க ஏ அணியுடன் விளையாடும் இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சாஹல் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியில் அவரைச் சேர்க்கும் பொருட்டு இதில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய பி அணிக்கு மனீஷ் பாண்டே கேப்டன். யோ- யோ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் இங்கிலாந்து தொடரில் இடம்பெறாமல் போன சஞ்சு சாம்சன், இந்திய பி அணிக்கு திரும்பியுள்ளார்.
வீரர்கள் விவரம் வருமாறு:

இந்திய ஏ அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஆர்.சமர்த், மயங்க் அகர்வால், ஈஸ்வரன், ஹனுமா விஹாரி, அங்கித் பாவ்ன், கே.எஸ்.பரத், அக்சர் படேல், நதீம், சாஹல், ஜெய்ந்த் யாதவ், ஆர். குர்பானி, நவ்தீப் சைனி, அங்கித் ராஜ்புத், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, ஆர்.சமர்த், சூர்யகுமார் யாதவ், விஹாரி, நிதீஷ் ராணா, சித்தேஷ் லத், சஞ்சு சாம்சன், மயங்க் மார்கண்டே, கே.கவுதம், குணால் பாண்ட்யா, தீபக் சாஹர், முகமது சிராஜ், சிவம் மவி, கலீல் அகமது.

இந்தியா பி அணி:
மனீஷ் பாண்டே (கேப்டன்), மயங்க் அகர்வால், ஈஸ்வரன், சுபம் கில், தீபக் ஹூடா, ரிக்கி புவி, விஜய் சங்கர், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்ந்த் யாதவ், டி.ஏ.ஜடேஜா, சித்தார்த் கவுல், பிரசித் கிருஷ்ணா, குல்வந்த்,  நவ்தீப் சைனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து