இந்திய மண்ணில் தொடரை வென்றது 'ஆஷஸ்' வெற்றிக்கு சமமான ஒன்று - இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      விளையாட்டு
James Anderson 2018 7 24

லண்டன் : 2012-ல் இந்தியாவில் நடைபெற்ற தொடரை கைப்பற்றியது ஆஷஸ் தொடரை வென்றதற்கு சமமானது என்று வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

சிறந்த நினைவுகளில்...

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக விராட் கோலியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. புதுப்பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிக அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, 2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது மிகவும் சிறந்த நினைவுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

சிறந்த தொடராக...

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். அப்போது தென்ஆப்பிரிக்கா அணி நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இது ஒரு சிறந்த டெஸ்ட் தொடராக இருந்தது. தற்போது இந்திய அணிக்கெதிராக விளையாட இருப்பது எனக்கு அதேபோல்தான் தோன்றுகிறது. நான் இதுவரை இந்திய மண்ணில் விளையாடியதில் 2012-ம் ஆண்டு நடைபெற்றதுதான் தலைசிறந்த டெஸ்ட் தொடர். ஒரு வேகப்பந்து வீச்சாளர் நீங்கள் இந்தியாவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரும் சொல்வது சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்கள் வீழ்த்துவார்கள். சிறந்த வேகபந்து வீச்சாளர் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்பதுதான்.

தூண்டுதலாக இருக்கும்...

ஆகவே, இந்திய மண்ணில் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பெருமையான தொடராக கருதுகிறேன். எந்தவொரு பந்து வீச்சாளர்களும் சிறந்த அணிக்கெதிராக விளையாட வேண்டும். அப்போது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவார்கள். இதுதான் எனக்கு தூண்டுதலாக இருக்கும்’’ என்றார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என வெற்றி பெற்றது. அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து