முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு நாற்காலி வசதி

புதன்கிழமை, 25 ஜூலை 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற்காலி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு திருமலையில் நேர்த்திக்கடனாக தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற் காலிகளை ஏற்பாடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இத் திட்டம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருப்பதி ஏழுமாலையானுக்கு தினமும் 30 முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலை முடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருமலையில் இதற்காகவே கல்யாண கட்டா எனும் இடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கீழே உட்காருவதால் சங்கடமாக உள்ளதாகவும், குறிப்பாக, மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியோர், பெண்கள் ஆகியோர் கீழே உட்கார்ந்து தலை முடி காணிக்கை செலுத்த சங்கடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கல்யாண கட்டாவில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதியோர், மாற்று திறனாளிகளுக்காக நாற்காலி வசதி செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கல்யாண கட்டாவில் நாற்காலி வசதி அமைக்கப் பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்படும் என புட்டா சுதாகர் யாதவ் உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து