இலங்கைக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட்: 282 ரன்கள் குவித்து பவன் ஷா புதிய சாதனை

புதன்கிழமை, 25 ஜூலை 2018      விளையாட்டு
Pawan Shah 2018 7 25

கொழும்பு : இலங்கைக்கு எதிரான போட்டியில் 282 ரன்கள் குவித்ததன் மூலம் காம்பீர், புஜாராவை பின்னுக்குத் தள்ளி பவன் ஷா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வெற்றி...

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை - இந்தியா அணிகள் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஆட்டம் ஹம்பன்டோட்டாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தொடங்கியது.

282 ரன்கள்...

அதர்வா (177), பவன் ஷா ஆகியோரின் அபார சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பவன் ஷா 177 ரன்னுடனும், வதேரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பவன் ஷா இரட்டை சதம் அடித்ததன் உடன் 282 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்தது.

அதிக ரன்கள்...

282 ரன்கள் குவித்த பவன் ஷா, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டேன்மே ஸ்ரீவாஸ்தவா பாகிஸ்தானுக்கு எதிராக 220 ரன்களும், கவுதம் காம்பீர் இங்கிலாந்திற்கு எதிராக 212 ரன்களும், புஜாரா இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்களும், அபிநவ் முகுந்த் இலங்கைக்கு எதிராக 205 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இவர்கள் அனைவரையும் பவன் ஷா முந்தியுள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து