பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த அஜாஸ் பட்டேல் !

புதன்கிழமை, 25 ஜூலை 2018      விளையாட்டு
Ajay Patel  2018 7 25

வெல்லிங்டன் : பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் இந்தியாவில் பிறந்தவரான அஜாஸ் பட்டேல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த வருடம் அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் விளையாடுவதற்கு இந்தியாவில் பிறந்தவரான அஜாஸ் பட்டேல் (வயது 29) நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.  இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் உள்ளூர் போட்டிகளில் சிறப்புடன் விளையாடி விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

முதன்முறையாக...

அந்த அணியில் உள்ள மிட்செல் சான்ட்னெர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற்று வருகிறார்.  அவருக்கு பதிலாக இடம் பெற்றுள்ள அஜாஸ் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். அஜாசுடன், டாட் ஆஸ்சில் மற்றும் இஷ் சோதி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெறுகின்றனர்.  இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக தகவலில் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி விவரம்:

கனே வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்சில், டாம் பிளெண்டல், டிரென்ட் போல்ட், காலின் டே கிராண்ட்ஹாம், மேட் ஹென்றி, டாம் லத்தம், ஹென்றி, நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ஜீத் ராவல், இஷ் சோதி, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே. வாட்லிங்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து