டெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட் ஓபன் டாக்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      விளையாட்டு
Dravid Tendulkar 2018 7 25

லண்டன் : என் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கர்தான் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

25 கேள்விகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் தற்போதையை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்போ இணைய நிறுவனத்திற்கு கலந்துரையாடல் போல் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சுமார் 25 கேள்விகள் டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அவரும் டக் டக் என பதில் அளித்தார்.

சிறந்த வீரர் சச்சின்...

அதில், உங்கள் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, டிராவிட் சச்சின் டெண்டுல்கரை கூறியுள்ளார். ‘நான் விளையாடியதிலேயே சிறந்த வீரர் சச்சின். தரமான, கிளாசிக் பேட்டிங்கிற்காக சச்சினை தேர்வு செய்வேன்’ என்றார்.

ஒரே நேரத்தில்...

டிராவிட் சச்சின் பெயரை குறிப்பிட்டதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. இந்திய அணியில் ஒரே நேரத்தில் விளையாடியவர்கள் சச்சின், டிராவிட். ஒருநாள் போட்டியில் சச்சின் தொடக்க வீரராக களமிறங்க அவருக்கு அடுத்து டிராவிட் 3வது இடத்தில் இறங்குவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் 3வது இடத்தில் களமிறங்க, சச்சினோ அவருக்கு பின் 4வது இடத்தில் விளையாடுவார்.

331 ரன் குவிப்பு...

ஒருநாள் போட்டிகளில் 1998ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சச்சின் - டிராவிட் ஜோடி 331 ரன் குவித்ததே இந்திய அணியில் அதிகபட்சமாகும். டெஸ்ட் போட்டியில் 2010ம் ஆண்டு இந்த ஜோடி 222 ரன் குவித்தது. இருவருமே 2007 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தும் இந்திய அணி நாக்-அவுட் சுற்றைக் கூட கடக்கவில்லை.

வதந்திக்கு முற்றுப்புள்ளி...

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது, உருக்கமான இறுதிப் பேச்சையும் கொடுத்தார். ஆனால், டிராவிட் ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொள்ளவில்லை. இதனால், சச்சினுக்கும், டிராவிட்டுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு என்று அப்போது செய்திகள் வெளியாகின. பின்னர், சச்சின் விளக்கம் கொடுத்தும் கூட வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், தற்போது சச்சின் தான் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் என்று டிராவிட் கூறியுள்ளதன் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் படைக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து