திருவாதவூரில் மரம் வளர்த்தால் மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு.

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      மதுரை
tree to gold news

மேலூர் - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் அரசு துவக்கப்பள்ளியில் திருவாதவூர் கனவு கிராம அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் மேலூர் அரிமா சங்கத்தினர் இணைந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். இந்த மரக்கன்றுகளை வழங்குவதற்க்கு முன்பாக மாணவர்களிடம்,கனவு கிராமத்தின் தலைவர் ஜெகநாதன் மற்றும் நார்வே நாட்டில் பணிபுரியும் தமிழ் ஆர்வலர் பிரபு கண்ணன், முன்னாள் தலைமை ஆசிரியர் ராதா, தலைமை ஆசிரியர் டெய்சி செல்வராணி, ஆசிரியர் பாண்டி, கனவு கிராம அமைப்பைச் சேர்ந்த பாலாஜி, மற்றும் அரிமா சங்கத்தினர், மரங்களை வளர்பதினால் கிடைக்கும் நன்மைகள் அவை மனித வாழ்வுக்கும் இந்த பூமிக்கும், எவ்வாறு பயன் தருகின்றது போன்ற பல்வேறு கருத்துக்களை வழங்கி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர். பெற்றுக் கொண்ட மரங்களை மாணவர்கள் முறையாக வளர்த்து பராமரித்து நல்ல விதமாக வளர்த்தால் அடுத்த வருடம் சிறந்த மரக்கன்றை தேர்ந்தெடுத்து அதை சிறப்பாக வளர்த்த மாணவருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று திருவாதவூர் கனவு கிராம அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து