முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழாவும் முக்கியமானதாகும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்  கலந்து கொள்வார்கள். இவ்வருடத்திற்கான கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக ஆடித்தேரோட்டம் நேற்று நடந்தது. வழக்கமாக மாலையில் நடைபெறும் ஆடித்தேரோட்டம் இந்த வருடம் சந்திரகிரஹனம் சார்பாக காலையில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி, ஞீதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். அதன்பின் சிறப்பு ஞீஜைகளுக்கு பின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கொடியசைத்து, தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ். அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், அகரம் பேரூர் செயலாளர் சக்திவேல், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் உட்பட கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்தடைந்து மீண்டும் நிலை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடிநின்று சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து