குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      மதுரை
tmm minister RBU kudimaramathu- news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.3.38கோடி செலவில் 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் மக்கள் பெரிதும் பயனடையும் வகையில் நீராதாரங்களை மேம்படுத்திடும் வகையில் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொண்டு புனரமைத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இரண்டாவது கட்டமாக 1511கண்மாய்களை சீரமைத்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்;களில்  உள்ள 15 கண்மாய்களை தமிழக நீர்வளஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து செய்திட ரூ.3.38கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உரப்பனூர் பாப்பான்குளம் கண்மாய்,புங்கங்குளம் கண்மாய்,மேல உரப்பனூர் கண்மாய்,வாகைக்குளம் கண்மாய்  உள்ளிட்;ட 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து  பணிகளுக்கான பூமிபூஜை விழா அந்தந்த கண்மாய்கரை பகுதியில் நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.திரளான பொதுமக்களுடன் விவசாயிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்ட இந்த பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட கண்மாய்களில் 3.38கோடி செலவில் பொதுமக்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின்  ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் பொதுமக்களுக்கும் விவசாய பெருங்குடியினருக்கும் இனிப்புகள் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: திருமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள 15 பொதுப்பணித்துறை கண்மாய்களில் தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது.வருகிற வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் நீரை சேமித்து வைத்திட இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.அம்மா நமக்கு தெய்வமாக இருக்கிற காரணத்தினால் இயற்கை நமக்கு ஒத்துழைத்ததன் பேரில்   கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால் அவை திறந்து விடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் சாதிக்க முடியாததை,கர்நாடகா சாதிக்க முடியாததை  நம்முடைய அம்மாவின் அருளாசியுடன் இயற்கை அன்னை நம்முடைய காவிரி அன்னையை நமக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.மன்னர் காலத்தில் பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாத்தார்கள்.அதே போல் இன்றைக்கு இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாத்திடும் வகையில் முதல்கட்டமாக தமிழகத்தில்100கோடி செலவில் 1200கண்மாய்கள் தூர்வாரப்பட்டது.தற்போது இரண்டாவது கட்டமாக 328கோடியில் 1500 பொதுப்பணித்துறை கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.தமிழக அரசின் இந்த திட்டம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.எளிமையான இந்த அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை விரும்பிடாத எதிர்கட்சிகள் கடந்த 17 மாதங்களில் நடத்திய 32ஆயிரம் போராட்டங்களை அம்மாவின் அரசு வெற்றிகரமாக சமாளித்து வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அம்மாவின் அரசை காப்பாற்றிடும் காவல் தெய்வமாக தாய்மார்கள் உள்ளனர் என்று பேசினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்: 50ஆண்டுகாலம் தமிழினத்திற்காக உழைத்தவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.உடல் நலிவடைந்துள்ள அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் தமிழகத்திற்கு சேவையாற்றிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.இது தொடர்பாக தமிழக துணை முதல்வரும் அமைச்சர்களும்  நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வந்துள்ளனர்.மீண்டும் அவர் பூரண உடல்நலம் பெற்று  மீண்டும் தமிழகத்திற்கு தொண்டாற்றிட வேண்டும் என்தே எங்களது ஆசை என்று தெரிவித்தார்.இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அனபழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,அவை தலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார், இணைசெயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் சாமிநாதன்,வக்கில்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து