இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடர்: சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      விளையாட்டு
aswin

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார்.

முதல் டெஸ்ட்...
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். எஸ்செக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டபோது அஸ்வின் கையில் காயம் அடைந்தார்.

குணமடைந்து...
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து விடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் காயத்தால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து